Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணியில் தொடரும் நீதியின் ஓலம் - நாளை பேரணி


யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் செம்மணிச் சந்தியில் இரவு பகலாக இடம்பெற்று வருகிறது.

போராட்டத்தின் இறுதி நாளான நாளைய தினம் திங்கட்கிழமை  17ஆம் திகதி காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணி ஆரம்பமாகி, கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் அலுவலகத்தை சென்றடைந்து, அங்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது..









No comments