Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கின் மாபெரும் மோட்டார் வாகன கண்காட்சி யாழில்.


வடமாகாணத்தின் மிகப்பெரியதும், விரிவானதுமான மோட்டார் வாகனக் கண்காட்சியான "AUTO X – Jaffna Motor Show 2026"  எதிர்வரும் 4ஆம், 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரையில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தில் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் 35க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கவுள்ளதுடன், முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள், வாகன விற்பனையாளர்கள், நிதி நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் சேவை வழங்குநர்கள், அத்துடன் நவீன போக்குவரத்து மற்றும் இயக்கத் தீர்வுகளை வழங்கும் நிறுவனங்கள் என வாகனத் துறையின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணையவுள்ளன.

இதன் மூலம் வடமாகாணத்தைச் சேர்ந்த வாகன ஆர்வலர்கள் மற்றும் புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பவர்கள், சந்தையில் கிடைக்கக்கூடிய வாகனங்கள் மற்றும் நவீன போக்குவரத்து தீர்வுகளை ஒரே இடத்தில் பார்வையிட்டு, ஒப்பிட்டு, நேரடியாக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கான சிறந்த வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

கண்காட்சியில் கார்கள், SUV வாகனங்கள், வேன்கள், லொறிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

 இதன் மூலம் பார்வையாளர்கள் பல்வேறு முன்னணி  வாகன வகைகளை   நேரடியாகப் பார்வையிடுவதுடன், புதிய அறிமுகங்களை அறிந்துகொள்ளவும், வாகன விற்பனை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேரடியாக தொடர்புகொள்ளவும் முடியும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான போக்குவரத்து முறைகள் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், கண்காட்சியில் மின்சார வாகனங்கள் (EVs), மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல்வேறு மின்சாரப் போக்குவரத்து தீர்வுகளும் சிறப்பாக இடம்பெறவுள்ளன.

வடமாகாணத்தில் புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் பலருக்கு, AUTO X – Jaffna Motor Show 2026 ஒரே இடத்தில் பல்வேறு வாகனங்களை பார்வையிட்டு அனுபவிக்கும் சிறந்த வாய்ப்பை வழங்கும். அதேவேளை, வாகன விற்பனையாளர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, வாகன கொள்வனவு மற்றும் நிதி வசதிகள் தொடர்பான வாய்ப்புகளையும் ஆராய முடியும்.

இந்தக் கண்காட்சிக்கு வாகன ஆர்வலர்கள், குடும்பங்கள், வர்த்தக உரிமையாளர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள் மற்றும் தங்களது அடுத்த வாகனத்தை கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வருகை தருவார்கள் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கண்காட்சியினை முன்னிட்டு எதிர்வரும் 3ஆம் திகதி, AUTO X – Jaffna Motor Show 2026 கண்காட்சியின் உத்தியோகபூர்வ ஆரம்பத்திற்கு முன்னதாக, யாழ்ப்பாண நகரை உற்சாகப்படுத்தும் வகையில் பிரமாண்டமான சிறப்பு வாகன அணிவகுப்பு (Vehicle Parade) நடைபெறவுள்ளது.

மேலும், கண்காட்சியின் மூன்று நாட்களிலும் தொழில்முறை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் பங்கேற்புடன் சிறப்பு மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி (Motorbike Stunt Show) நடைபெறவுள்ளது. மோட்டார் சைக்கிள் சாகசங்கள் மற்றும் விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்கு சிறப்பு அனுபவத்தை வழங்கும்.

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நல்லூர் திருவிழா காலப்பகுதியுடன் இக்கண்காட்சி இடம்பெறுவதால், வடமாகாணத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமன்றி, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் மக்களும் கண்காட்சியில் பெருமளவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இந்த ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மிகப்பெரிய நுகர்வோர் கண்காட்சிகளில் ஒன்றாக AUTO X – Jaffna Motor Show 2026 அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AUTO X – Jaffna Motor Show 2026, யாழ்ப்பாணத்தை வாகனத் துறையின் நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான வளர்ந்து வரும் முக்கிய மையமாக நிலைநிறுத்துவதுடன், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் பிராந்திய சந்தைகளில் ஒன்றான வடமாகாண மக்களுடன் முன்னணி வாகன நிறுவனங்கள் நேரடியாக தொடர்புகொள்வதற்கான சிறப்பான தளத்தையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவித்தார். 

No comments