Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

துரிதகெதியில் புனரமைக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறை


யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறை மற்றும் இறங்கு துறை வீதி புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் புதன்கிழமை நேரில் களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.

குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாம் கட்டப் பணிகள்  கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், இரண்டாம் கட்டப் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி  அன்று ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த புனரமைப்பு பணிகள் ஆயிரத்து 283.80 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் முதலாம் கட்டமாக 299.80 மில்லியன் ரூபாய் செலவில் இறங்கு துறைக்கான வீதி புனரமைப்பு  மற்றும் நடைபாதை புனரமைப்புப் பணிகளும், இரண்டாம் கட்டமாக 984 மில்லியன் ரூபாய் செலவில் குறிகட்டுவான் இறங்குதுறை புனரமைப்புப் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.





No comments