Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வரலாறும் வாழ்வியலும் பிணைந்த மணற்காடு சவுக்கங்காடு:


யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மணற்காடு பகுதி, இயற்கை எழிலும் வரலாற்றுத் தொன்மையும் நிறைந்த ஒரு தனித்துவமான நிலப்பரப்பாகும். மணல் குன்றுகளும், அதனை ஒட்டி அமைந்துள்ள அடர்ந்த சவுக்கு மரக் காடும் இப்பகுதியின் முதன்மை அடையாளங்களாகும்.


மணற்காடு சவுக்கங்காடு ஒல்லாந்தர் கால தேவாலயம்   ஈழத் தமிழர்களின் அண்மைக்கால வரலாற்றுடன் பிரிக்க முடியாதவாறு பிணைந்துள்ளது.

அவ்வாறு மக்களின் பாரம்பரியத்துடன் பிணைந்து காணப்படுகின்றன முக்கியமாக மணற்காடு பகுதியில் வாழும் மக்களில் அதிகமாக கத்தோலிக்க மதத்தினை பின்பற்றுகின்றனர் அவர்களின் வழிபாட்டு சிறப்பு மிக்க பாரம்பரிய நிகழ்வான யேசு கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாடும் போது குறித்த சவுக்கங்காடு பகுதியில் மரங்கள் வெட்டி அலங்கார வேலைகள் செய்யப்படும்

அது மட்டும் இல்லாமல் ஏனைய கிராமங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் வருமானம் ஈட்டி சவுக்கங்காட்டின் பாதுகாப்பு மற்றம் மீள் நடுகை நடவடிக்கைகளை செய்ய மிக உதவியாக இருக்கும்

மணற்காடு சவுக்கங்காட்டின் வரலாற்று பின்னணி

மணற்காடு சவுக்கங்காடு என்பது திடீரென உருவான ஒன்று அல்ல. கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக (சுமார் 50 ஆண்டுகள்) இயற்கையின் பங்களிப்போடு மனித உழைப்பும் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு பாரம்பரிய இயற்கைச் சொத்தாகும்.

ஆரம்ப காலத்தில் மணல் அரிப்பைத் தடுக்கும் நோக்கோடும், கடலோரப் சூழலைப் பாதுகாக்கவும் மணற்காடு வாழ் மக்களாலும், இயற்கையாகவும் சவுக்க மரங்கள் வளரத் தொடங்கின

அதாவது மண் வளத்தில் புகழ் பெற்ற இக்கிராமம் மண் அகழ்வை கட்டுப்படுத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம் என்பவரால் இவ் சவுக்கம் காடு வைக்கப்பட்டு பாதுகாக்க பட்டது என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்

 மணற்காடு மக்கள் மட்டுமன்றி வடமராட்சி கிழக்கு மக்கள் மற்றும் பருத்துறை மக்கள் தமது அங்கங்களில் ஒன்றாகவும் தம் உணர்வுடன் பிணைந்தது போல் சவுக்கங்காட்டினை  பாதுகாப்பான முறையில் பாதுகாத்து வந்தனர்

சிறு சிறு பற்றைக்காடாக இருந்த சவுக்கங்காடு பல தேவைகளுக்காக இயற்கையாகவும் செயற்கை யாவும் அழிவடைவதை அவதானித்த விடுதலை புலிகளின் அதன் பாதுகாப்பை தமது வசப்படுத்தி மிக சிறப்பான முறையில் பராமரிப்பு செய்து இப்போது காணப்படும் சவுக்கங்காட்டினை உருவாக்கம் செய்தனர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்பு:

விடுதலைப் புலிகளின் நிர்வாக அமைப்பினரால் இப்பகுதியில் முறையான மரநடுகைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் அரணாகவும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் இக்காடு வளர்த்தெடுக்கப்பட்டது.

சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையம்:

தற்போது இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பொழுதுபோக்குத் தளமாக விளங்கி வருகின்றதோடு தினம் தினம் அதிக சுற்றுலா வாசிகள் வருவதை அவதானிக்க முடிகின்றது

நிர்வாக எல்லைகளும் உரிமையியல் சிக்கல்களும்

மணற்காடு சவுக்கங்காடு அமைந்துள்ள நிலப்பரப்பானது முழுமையாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இருப்பினும், இதன் நிருவாக எல்லைகள் தொடர்பாகச் சில குழப்பங்கள் நிலவுகின்றன அதவாது இதனை யார் ஆளுகை செய்வது மற்றும் பாதுகாப்பது தொடர்பாக பல முரண்பாடு காணப்படுகின்றன

திணைக்களங்களின் ஆக்கிரமிப்பு முயற்சிகள்: 

வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களம் என்பன இப்பகுதியைத் தமது அதிகாரப்பூர்வக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காகப் பலமுறை நில அளவீடுகளும் செய்யப்பட்டுள்ளன அதனை பிரதேச வாழ் மக்களின் எதிர்பை காட்டிய போது அவர்கள் விட்டு சென்றுள்ளனர்

ஆக்கிரமிப்பு மற்றும் ஆளுகைக்கு போராடும் திணைக்களங்கள் இதுவரை புதிதாக மர நடுகை மற்றும் விபத்துகள் ஏற்படும் போது பாதுகாக்கும் நடவெடிக்கைகளில் ஈடுபடுவது இல்லை என மக்கள் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்

மக்களின் அதிருப்தி: 

பாரம்பரியமாகத் தமிழ் மக்களின் பயன்பாட்டிலும், பிரதேச செயலக ஆளுகையிலும் உள்ள நிலங்களை மத்திய அரசின் திணைக்களங்கள் தன்வசப்படுத்த முயல்வது, உள்ளூர் மக்களின் பூர்வீக உரிமைகளைப் பறிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

காடழிப்பும் தீ விபத்துகளுக்கான காரணங்களும்

அண்மைக்காலமாக மணற்காடு சவுக்கங்காடுகளில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகள் இச்சூழல் மண்டலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இத் தீ விபத்துகளை இரு முக்கிய காரணிகளாக வகைப்படுத்தலாம்

இயற்கை காரணிகள்
காலநிலை மாற்றம்: 

உலகளாவிய காலநிலை மாற்றத்தின் காரணமாகப் பருவகால மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளது. அதனால் கோடைகாலத்தில் ஏற்படும் கடுமையான வெப்பமும், வறண்ட காற்று வீச்சும் காய்ந்த சவுக்க இலைகளில் எளிதில் தீப்பற்ற வழிவகுக்கின்றன.

செயற்கை (மனித) காரணிகள்

சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் வீசிச் செல்லும் அணைக்கப்படாத புகைப்பிடி எச்சங்கள் மற்றும் பிளாஸ்டிக்/கண்ணாடிப் பொருட்கள் மூலம் தீ பரவுகிறது. அத்துடன் காடழிப்பு, மணல் அகழ்வு மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரால் திட்டமிட்டு வைக்கப்படும் தீ.

முறையான பாதுகாப்பின்மை

 காட்டுத்தீயை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கான போதிய தீயணைப்பு வசதிகளோ அல்லது கண்காணிப்புக் கோபுரங்களோ அப்பகுதியில் இல்லாது இருக்கிறது.

மணற்காடு சவுக்கங்காட்டின் முழுமையான நிர்வாக உரிமையை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திடமே வைத்திருக்க வேண்டும்.சமூக அடிப்படையிலான பாதுகாப்பு: உள்ளூர் சமூக அமைப்புகள், இளைஞர் அணிகள் மற்றும் சூழலியலாளர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் 

அத்துடன் சுற்றுலாப் பயணிகளுக்கான விழிப்புணர்வுப் பலகைகளை நடுதல், காய்ந்த சவுக்க இலைகளை அவ்வப்போது அகற்றுதல் மற்றும் தீயணைப்புச் சாதனங்களை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம் 

மணற்காட்டின் வரலாற்று மற்றும் சூழலியல் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு, அதனைப் பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய இயற்கைச் சுற்றுலா மண்டலமாகப் பிரகடனப்படுத்துதல்.

தீக்கு உள்ளான காட்டு பகுதியில் மூலிகை மரமான சஞ்சீவி மற்றும் வேம்பு மரங்கள் முழுமையாக எரிந்து சாம்பல் ஆகி உள்ளன அது மட்டுமல்லாமல் தீக்கு உள்ளான பிரதேசம் முழுவதும் எரிந்து சாம்பலாகிய பின்னர் தான் எரிவில் இருந்து மீண்டுள்ளது

கடந்த காலங்களில் குறித்த காட்டு பகுதி தீ பற்றி எரியும் போது பிரதேச  வாழ் மக்கள் தான் தீ அணைப்பு வேலைகளில் அதிகம் ஈடுபடுவது வழக்கம்

ஆனாலும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தின் போது பிரதேச மக்கள் அணைப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள இல்லை

காடுகளை பாதுகாப்பதில் அதிகார வர்க்கத்தின் கெடுபிடிகளும், அதனூடாக எழும் மக்கள் அவநம்பிக்கையும் இன்றைக்கு மிக முக்கிய சமூகச் சிக்கலாக மாறியுள்ளன. அண்மையில் இடம்பெற்ற தீ விபத்தின் போது, அப்பகுதி மக்கள் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தமை வேதனையளிக்கும் ஒரு நிகழ்வாகும்.

சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்து இயற்கைக்கும் அப்பகுதி சூழலுக்கும் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. ஆனால், அத்தீயை அணைக்க அப்பகுதி மக்கள் முன்வரவில்லை என்பது அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. ஊரின் வளமும் உயிர்களும் ஆபத்தில் இருக்கும் போது, எப்போதும் முன்னிற்கும் பொதுமக்கள் ஏன் இந்த முறை கைகட்டி வேடிக்கை பார்த்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.


இது குறித்து அப்பகுதி மக்களிடம் வினவிய போது, அவர்களின் பின்னணியில் உள்ள கசப்பான அனுபவங்கள் வெளிவந்தன.
காட்டின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி மக்கள் காட்டுப்பகுதிக்குச் செல்லும் போது, பாதுகாப்புத் திணைக்களங்களால் அவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.சில நேரங்களில் காட்டைப் பார்வையிட அல்லது பாரம்பரிய தேவைகளுக்குச் செல்லும் சாதாரண பொதுமக்கள் கூட திணைக்களங்களால் கைது செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

 இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளும், சட்ட நடவடிக்கைகளும் மக்களிடையே அச்சத்தையும், திணைக்களங்கள் மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன. "உதவப் போய் நாங்கள் வழக்குகளிலும் அச்சுறுத்தல்களிலும் சிக்குவதை விட ஒதுங்கியிருப்பதே மேல்" என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மக்களின் வேண்டுகோளும் முன்வைப்பும்
இச்சிக்கலுக்குத் தீர்வாக மக்கள் முன்வைக்கும் கருத்து மிகவும் தெளிவானது:

காட்டின் ஆளுகையையும் பராமரிப்பையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாகத் தந்தால், அதனைத் தங்களுடைய சொந்தச் சொத்தாகக் கருதி மிகச் சிறப்பாகப் பாதுகாப்போம் என்று உறுதியளிக்கின்றனர்.

தலைமுறை தலைமுறையாகக் காட்டோடு இணைந்து வாழ்ந்த மக்களுக்குக் காட்டின் ஒவ்வொரு அங்குலமும் அத்துபடி. அதிகாரத்துவத்தை விட அப்பகுதி மக்களின் பங்களிப்பே இயற்கை வளங்களை உண்மையாகப் பாதுகாக்கும்.

மக்களைப் புறந்தள்ளிவிட்டு எந்தவொரு இயற்கை வளத்தையும் அதிகாரிகளால் மட்டும் பாதுகாத்துவிட முடியாது. காட்டுத் தீ விபத்தின் போது மக்கள் ஒதுங்கியிருந்தமை அதிகார வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். திணைக்களங்கள் கெடுபிடிகளைக் குறைத்து, அப்பகுதி மக்களை நம்பிக்கைக்குரிய பங்காளிகளாக இணைத்துக் கொள்ளும் போது மட்டுமே இத்தகைய பேரழிவுகளைத் தடுக்க முடியும். இயற்கை வளப் பாதுகாப்பில் மக்கள் பங்களிப்பை உறுதி செய்வதே நிரந்தரத் தீர்வாகும்.

இதன் ஆளுகை தமக்கு தந்தால் தாம் இதனை முழுமையாக பாதுக்காக்க முடியும் பாதுகாப்பு கருதி தாம் காட்டு பகுதிக்குள் போகும் போது திணைக்களங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் சில வேலை கைது செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்

தமது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக தந்தால் மிக சிறப்பாக இதனை பாதுகாப்போம் என தெரிவித்துள்ளனர்

ஆக்கம்
பூ.லின்ரன்
ஊடகவியலாளர்.

No comments