Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேசிய மட்ட Algothon 2026 போட்டியில் SLIIT Northern Uni மாணவர்கள் முதலிடம்


SLIIT ஏற்பாடு செய்த தேசிய மட்ட Codefest 2026 Algothon நிரலாக்கப் போட்டியில், SLIIT Northern Uni மாணவர்கள் முதலிடத்தைப் பெற்று சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

இலங்கையின் அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களின் அல்கோரிதம் மற்றும் நிரலாக்கத்  திறன்களை பரிசோதிக்கும் வகையில் Algothon 2026 போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

தர்க்கரீதியான சிந்தனை மற்றும் அல்கோரிதம் தொடர்பான அறிவைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாட்டின் கீழ், வழங்கப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது இப்போட்டியின் முக்கிய அம்சமாகும்.

குறித்த Algothon போட்டியில் எமது  SLIIT Northern Uni சார்பில் பங்கேற்ற  நிரோஷா பிரபாகர் (SLIIT – Y4S1) ஜெயராகவன் ஜெயகாந்தன் (UOB – Top-Up), மற்றும் நகுலேசன் கெனுஷன் (SLIIT – Y4S1) ஆகிய மூன்று மாணவர்கள் இணைந்து போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்றனர்.

மாணவர்களின் இந்தச் சாதனை மூலம் அவர்களின் நிரலாக்கத் திறன், அல்கோரிதம் சார்ந்த சிந்தனை, பிரச்சினைத் தீர்க்கும் திறன் மற்றும் குழுவாகச் செயல்படும் திறன் ஆகியன வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. 

பல்கலைக்கழக மட்டத்தைத் தாண்டி தேசிய மட்டப் போட்டியில் பெற்றுள்ள இந்த வெற்றி, SLIIT Northern Un i மாணவர்களின் தொழில்நுட்பத் திறனையும் போட்டித்திறனையும் வெளிக்கொணர்கின்றது.

இந்தச் சாதனை மேலும்  SLIIT Northern Uni ஆல் மாணவர்களின் கல்வியுடன் இணைந்த தொழில்நுட்பத் திறன் வளர்ச்சி, மற்றும் நடைமுறை அறிவை மேம்படுத்துவதற்கு வழங்கப்படும் முக்கியத்துவங்களை எடுத்துக்காட்டுகிறது. 

பல்கலைக்கழகத்தின் கல்விச் சூழலில் வளர்த்தெடுக்கப்படும் திறன்களை தேசிய மட்ட அரங்கில் வெளிப்படுத்தி, தமது திறமையை நிரூபித்துள்ள இந்த மூன்று மாணவர்களுக்கும் இச்சாதனை பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் SLIIT Northern Uni மாணவர்கள் தேசிய மட்ட தொழில்நுட்பப் போட்டியில் தமது திறமையைப் பதிவு செய்துள்ளதுடன், எதிர்காலத்தில் மேலும் பல மாணவர்கள் தொழில்நுட்பம், புதுமை மற்றும் கணினித் துறைகளில் தமது திறன்களை வளர்த்துக்கொள்ள ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாகவும் அமைகின்றது.

SLIIT Northern Uni சார்பில் Algothon 2026 போட்டியில் முதலிடத்தைப் பெற்ற  பி.நிரோஷா, ஜெ.ஜெயராகவன் மற்றும் ந.கெனுஷன்  ஆகிய மாணவர்களுக்கு SLIIT Northern Uni சமூகம் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம் என SLIIT Northern Uni யினர் தெரிவித்துள்ளனர். 

No comments