Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

'MANITHEE' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா கனடாவில்


TRM Picture தயாரிப்பில், எம்.ஜெ நிதர்சனின் இயக்கத்தில் இலங்கையில் உருவாகியுள்ள MANITHEE – THE FIRE BIRD திரைப்படத்தின் பிரமாண்ட வெளியீட்டு விழா , எதிர்வரும் 11ஆம் திகதி மதியம் 1.00 மணிக்கு, கனடாவின் Scarborough, Toronto பகுதியில் அமைந்துள்ள Woodside Cinemas திரையரங்கில் நடைபெறவுள்ளது.

எம்.ஜெ. நிதர்சன்  இயக்கியுள்ள இத்திரைப்படம், அவரது கதை, திரைக்கதை மற்றும் வசன உருவாக்கத்தில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக பத்மஜயன் சிவா பணியாற்றியுள்ளதுடன், ஒளிப்பதிவை ஏ,கே கமல் மேற்கொண்டுள்ளார்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், சர்வதேச பார்வையாளர்களை சென்றடையும் வகையில் பல்வேறு வெளியீட்டு நடவடிக்கைகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கனடாவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தமிழ் கலைஞர்கள், திரைப்படத்துறையினர், கலை மற்றும் கலாசார ஆர்வலர்கள், சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான திரு. குணபாலன் நாகதீபன் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்து நடத்தப்படுகின்றது.

மேலும், நிகழ்வைத் தொடர்ந்து கனடாவில் உள்ள தமிழ் கலைஞர்கள் மற்றும் கலாசார சமூகத்தினருடனான சந்திப்புகள், ஊடக சந்திப்புகள் மற்றும் திரைப்பட விளம்பர நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் மற்றும் கலாசார நிகழ்வுகளிலும் திரைப்படக் குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.

No comments