Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அருகிவரும் பாரம்பரிய கலைகளை மீட்போம்




ஒவ்வொரு இனத்தினதும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியவாறு அதனை வளர்த்துக் கொள்வதற்கு பண்பாட்டு விழாக்கள் பெரிதும் உதவுகின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண பண்பாட்டு விழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே  ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, 

இந்த நிகழ்வு இளையோரை கலைத்துறைக்கு ஊக்குவிப்பதையும், கலைகளுக்காக மூத்த தலைமுறையினர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல இளம் கலைஞர்கள் உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும் கலைகளை வளர்ப்பதற்கும் வடக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட கலைமன்றங்களுக்கு கடந்த ஆண்டும் பெறுமதியான இசைக்கருவிகளை வழங்கியிருந்தோம். இந்த உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும். கலைஞர்களையும் கலைமன்றங்களையும் தொடர்ச்சியாக ஊக்குவிக்க நாம் நடவடிக்கை எடுப்போம்.

இன்றைய காலகட்டத்தில் பல பாரம்பரியக் கலைகள் அருகிவரும் நிலை காணப்படுகிறது. அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது எமது பொறுப்பாகும் என தெரிவித்தார்.

No comments