Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆசாத் மௌலானாவிற்கு வேலை வாய்ப்பு வழங்கிய டக்ளஸ் ?



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்திய ஆசாத் மௌலானா என்பவரின் தந்தை ஈ.பி. ஆர்.எல்.எப் அமைப்பின் உறுப்பினராக இருந்தவேளை புலிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டவர் என்ற ரீதியில் ஆசாத் மௌலானாவிற்கு  வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுத்தேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் 

மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணத்தில் ஒரு பத்திரிகையிலே வழக்கம்போல என்னை பற்றிய ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த செய்தியில், "தீவகப் படுகொலைகள், பிள்ளையான் விவகாரம்: டக்ளஸ் தேவானந்தாவிடம் டி.ஐ.டி.யினர் (TID) விசாரணை - 6 மணிநேரமாகத் துருவல்" என செய்தி வெளியிட்டுள்ளார்கள் 

என்னை யாரும் விசாரணைக்காக அழைக்கவில்லை. என்னை அழைத்தது வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகத்தான் அது விசாரணைக்கு இல்லை.

பிரித்தானியா சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் தோன்றிய ஆசாத் மௌலானா என்பவர் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக வெளியிட்ட தகவல் தொடர்பில் வாக்கு மூலம் பெறவே என்னை அழைத்தனர் 

சமீபத்தில் பிரான்ஸில் வைத்து இலங்கை தூதரகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஆசாத் மௌலானா கொடுத்த வாக்குமூலம் ஒன்றில் என்னுடைய பெயரும் வருகிறது. 

அந்த வகையில் என்னிடம் வாக்குமூலம் பெற செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி வருமாறு அழைப்புக் கடிதம் வந்தது. அந்த நேரம் நான் யாழ்ப்பாணத்தில் நின்றேன். 

அது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை தொடர்புகொண்டு, 'இப்படி ஒரு கடிதம் வந்திருக்கிறது, எனக்கு 18ஆம் தேதி வருவதற்கு சாத்தியமில்லை, அதனால் அது என்ன விடயம் என்று தெரிந்துகொண்டு நான் உங்களுக்கு என்னுடைய வாக்கு மூலத்தைத் தருகிறேன்.நான் கொழும்பு வருவதற்கு எனக்கு இரண்டு மூன்று நாள் தேவை' என்று கேட்டேன். 

ஏனென்றால் போன முறையும் அப்படித்தான் "வாருங்கள்" என்று கூப்பிட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலே இரண்டு மூன்று இரவுகளும், பின்னர் 14 நாள் சிறையிலும் இருந்தேன்.

அதனால் இம்முறை எதற்காக வாக்கு மூலம் பெற போகிறார்கள் என அறிந்து கடந்த 23-ஆம் திகதி சென்று வாக்குமூலம் அளித்தேன் 

வாக்குமூலம் கொடுக்கும்போது என்னுடைய வரலாறு எடுத்தார்கள்.. அதில் முஷ்பாத்தியாக நான் பதில் சொல்வதும் தர்க்கிப்பதும் என ஒரு முக்கால் மணிநேரம், ஒரு மணிநேரம் போய்விட்டது. 

அப்புறம் , ஆசாத் மௌலானா தினமுரசு மற்றும் எங்கள் தேசம் ஆகிய பத்திரிகைகளில் வேலை செய்துள்ளார் என அது தொடர்பில் விசாரித்தார்கள் 

அப்போது நான் சொன்னேன்: "எங்கள் தேசத்தோடு எனக்கு தொடர்பில்லை, ஆனால் தினமுரசு பத்திரிகையோடு எனக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது என்று

அந்த காலத்தில் தினமுரசு பத்திரிகை ஒரு பிரபலமான பத்திரிகையாக இருந்தது.  அதற்கு நூற்றுக்கணக்கான ஆட்கள் வெளியிலிருந்து கவிதைகள், கட்டுரைகள், செய்திகள் கொடுப்பார்கள். அதிலே இவர் ஒரு ஆளாக இருந்திருக்கலாம், ஆனால் எனக்கு அது தெரியாது. 

தினமுரசில் அவர் வேலை செய்யவில்லை, நிர்வாகத்தில் இருக்கவில்லை என்றேன்.

பிறகு அடுத்தது அவருக்கு நான் வேலைவாய்ப்பு கொடுத்தேனா என  கேட்டார்கள்

அதற்கு, மரமுந்திரி கூட்டுத்தாபனம் அப்போது என்னுடைய அமைச்சரவையின் கீழ் இருந்தது. அப்போது நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்கு வருவார்கள் 

அமைச்சராக இருக்கும்போது. அந்த வகையில் இவர் வந்திருக்கலாம். ஆனால் எனக்கு இவருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தேனா இல்லையா என்று நினைவில் இல்லை.

அதேநேரத்தில் கொடுத்திருக்க மாட்டேன் என்றும் நான் சொல்லமாட்டேன். 

ஏனென்றால்,ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவராக இருந்த பத்மநாபா சென்னையில் புலிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட வேளை 13 பேர் கொல்லப்பட்டார்கள். 

அதில் இரண்டு பேர்தான் இலங்கையைச் சேராதவர்கள், ஏனைய 11 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அதில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் விசாரித்த வேளை எனக்கு கமலன் என ஒரு பெயர் சொல்லப்பட்டது. 

யார் கமலன் என்று விசாரித்த நேரத்தில் அவருடைய பெயர் மொஹமட் இலியாஸ் மொஹமட் மிகிலார் அவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் 

 இந்த ஆசாத் மௌலானா என்பவர் அவருடைய மகன். அப்போ அந்த வகையில் தகப்பன் புலிகளால் கொல்லப்பட்ட வகையிலும், அவர் ஒரு இடதுசாரி என்றபடியினால்தான் ஈ.பி.ஆர்.எல்.எப் இல்  சேர்ந்திருப்பார், அந்த அனுதாபத்திலும் மகனுக்கு நான் வேலைவாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றேன் 

பிறகு ஆசாத் மௌலானா தனது வாக்கு மூலத்தில் "நான் ஒருமுறை தன்னை வந்து பார்க்கச் சொல்லித் தனக்கு அழைப்பு விடுத்து, தான் வந்து என்னை பார்த்தேன்" என்றும். அப்போது,  "கருணா பிரிந்து வந்திருக்கிறார்கள், அவர்களுக்கு ஆங்கில, மொழிப் பிரச்சனை இருக்கிறபடியினால் அவர்களுக்கு உதவி செய்ய முடியுமா என அவரிடம் நான் கேட்டதாகவும், அதற்கு தான் சொன்னாராம் , சரி நீங்கள் கேட்டால் தான் அதைச் செய்யத் தயார் என்று சொன்னதாகவும்" சொன்னார்கள். அதெல்லாம் பொய், அப்படி ஒன்றும் நடக்கவில்லை என கூறினேன்.

பிறகு பிள்ளையானும் சிந்துஜன் என்பவரும்  என்னிடம் வந்தார்களாம். அதுவும் அடுத்த பொய். 

ஏனென்றால் பிள்ளையான் எந்த சந்தர்ப்பத்திலும் நான் இருக்கிற வீட்டிற்கு வரவில்லை,

 என்னுடைய அமைச்சுக்கு வந்திருக்கிறார், நாடாளுமன்றத்தில் சந்தித்திருக்கிறேன், மற்ற வேறு வேறு நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கிறேனே ஒழிய மற்றபடி அவர் வீட்டிற்கு வரவில்லை. அப்போ இதெல்லாம் பொய் என்று சொல்லி முடித்து கையெழுத்துப் போட்டு கொடுத்துவிட்டு வந்தேன்.

அந்த வாக்கு மூல பதிவு இரண்டு மூன்று மணி நேரம்தான் இருக்கும். யாரோ சொல்லியிருக்கிறார்கள் 16 மணிநேரம் என்று அது பொய்யான தகவல்

 இப்போது நான் ஆசாத் மௌலானாவை பிள்ளையானுக்கு அறிமுகப்படுத்தினேனா அல்லது பிள்ளையான் எனக்கு அறிமுகப்படுத்தினாரா என்பது விசாரணையில் தெரியவரும். அது யார் யாருக்கு அறிமுகப்படுத்துவது பிரச்சனை இல்லை, சட்டவிரோதமும் இல்லை. 

ஆனால் ஆசாத் மௌலானாவும் டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால்தான் அது தவறு. ஆனால் அப்படி நடக்கவில்லை.

பிள்ளையான்தான் எனக்கு ஆசாத் மௌலானாவை அறிமுகப்படுத்தியதே ஒழிய, நான் இல்லை. தன்னை தொடர்புகொள்ள முடியாவிட்டால் நீங்கள் ஆசாத் மௌலானாவிற்கு சொன்னால் அவர் எனக்குச் சொல்வார், அவர் உங்களோடு தொடர்பில் (coordinate) இருப்பார் என. அந்த வகையில் அந்த ஆசாத் மௌலானாவினுடைய அறிமுகம், தொடர்புகள் இருந்ததே ஒழிய அந்த பத்திரிகை செய்தியில் சொன்னது போல இல்லை என தெரிவித்தார். 

அத்துடன் பொய்யான செய்தி வெளியிட்ட அந்த பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன். அதன் முதல் கட்டமாக குறித்த பத்திரிகையிடம் நஷ்டஈடாக 100 கோடி ரூபாய் கோரி எனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளேன் எனவும் தெரிவித்தார். 

No comments