யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் வீதியில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடம் இடித்து அகற்றப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட செல்வ சந்நிதி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீதியில் , வீட்டின் வெளியே அனுமதியின்றி நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது.
குறித்த நிழற்குடையின் கீழ் ஆலயத்திற்கு செல்வோர் இளைப்பாறி சென்றனர்.
இந்நிலையில் குறித்த நிழற்குடை நகர சபையின் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகவும் , அதனை அகற்றுமாறு உரிமையாளருக்கு நகர சபையினால் கால அவகாசம் கொடுத்து அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.
அவற்றை அகற்ற கொடுக்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் , வல்வெட்டித்துறை நகர சபையினரால் குறித்த நிழற்குடை இடித்து அகற்றப்பட்டுள்ளது.













No comments