யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் உள்ளக துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது
Jaffna Stallions Cricket Academy ஏற்பாட்டில் “The Friday Showdown – Indoor Men’s Open Cricket Tournament” எனும் ஆண்களுக்கான திறந்த உள்ளக துடுப்பாட்ட போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
07 வீரர்கள் பங்கேற்கும் 06 பந்து பரிமாற்றங்களை கொண்ட சுற்றுப்போட்டியானது பிரதி வெள்ளிக்கிழமைகளில் மாலை 06.30 மணிக்கு மின்னொளியில் நடைபெறவுள்ளது
சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டும் அணிகளுக்கு பெறுமதியான பண பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
போட்டியில் பங்கேற்பதற்காக பதிவுகளை எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னராக பதிவு செய்யுமாறும் , மேலதிக விபரங்களுக்கு 77 999 3949 மற்றும் 077 192 7081 ஆகிய தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டளர்கள் அறிவித்துள்ளனர்









No comments