தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் இன்று உணர்வெழுச்சியுடன் ஆரப்பிக்கப்பட்டது.
அகவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து தியாகதீபம் திலீபனின் உருவப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுடரேற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்
அதனையடுத்து குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களால் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.











No comments