Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து - பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் தனங்கிளப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் 

பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மன்னரை சேர்ந்த ஆர்னோல்ட் அன்ரனி (வயது 31) என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிளில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பயணித்த போது, தனங்கிளப்பு பகுதியில் , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதகுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

No comments