ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயரான 57 வயதுடைய எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்புக்குள் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு, இது உயிர்மாய்ப்பாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், அவரது மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) சார்பில் போட்டியிட்டு, 2014ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக தெரிவுசெய்யப்பட்டார்
பின்னர், 2018ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆதரவுடன் மீண்டும் ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









No comments