Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில்.பெருந்தொகை பணம் கூரிய ஆயுதங்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 09 பேர் கைது


யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஒன்பது பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் 

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் கார் ஒன்றிலும் , இரண்டு மோட்டார் சைக்கிளிலும் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த கும்பல் ஒன்றினை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர் 

அதன் போது , காரினுள் கூரிய ஆயுதங்களும் , 09 இலட்ச ரூபாய் பணமும் காணப்பட்டுள்ளது 

அதனை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த 09 பேரையும் கைது செய்ததுடன் , அவர்களின் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர் 

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர்களை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

No comments