Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்ப்பாணத்தில் கொலை - பிரதான சந்தேகநபர் தலைமறைவு ; மூவர் கைது


யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் சம்பவத்துடன் நொடர்படைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ,துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் ஜெனிதன் (வயது 33) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்

துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை நீடித்து வந்த நிலையில் , நபர் ஒருவரை, மோட்டார் சைக்கிளில. வந்த நால்வர் அடங்கிய குழு சரமாரியாக வெட்டி செய்தனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அங்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்தனர்

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்காக தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments