Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூர் உற்சவ காலத்தில் 234 சாரணர்கள் சேவையில்


நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ காலத்தில் சாரணர் சேவையில் பங்கேற்றவர்களுக்கான “சான்றிதழ் வழங்கும் விழா” நேற்றைய தினம் சனிக்கிழமை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் நடைபெற்றது.

இலங்கை சாரணர் சங்கத்தின் யாழ் மாவட்ட சாரணர் கிளையின் ஏற்பாட்டில், மாவட்ட சாரணர் ஆணையாளர், மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்த விழா இடம்பெற்றது. 

இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ். கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் மாலதி முகுந்தனும் , 

முன்னாள் உதவி மாவட்ட ஆணையாளரும் சர்வதேச இணைப்பாளருமான திரு இ. ராஜ்குமார் கௌரவ விருந்தினராக பங்கேற்றார்.

இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய மாவட்ட சாரணர் ஆணையாளர், மருதலிங்கம் பிரதீபன் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண மாவட்ட சாரணர் கழகம் தனது 110ஆவது ஆண்டை அனுஷ்டித்து வரும் நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில் தொடர்ச்சியாக 66 ஆவது ஆண்டாக சாரணர் சேவையை வழங்கியுள்ளது. 

இம்முறை எட்டு பாடசாலைகளில் இருந்து சுமார் 234 ஆண் மற்றும் பெண் சாரணர்கள் சேவையாற்றினர். குறிப்பாக நெடுந்தீவு பிரதேச சாரணர்களும் கலந்து தங்கியிருந்து சேவையாற்றினர் 

புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தின் விமான சாரணர் படையினர் வரவேற்பு நடனம் வழங்கினர் அப்பாடசாலையில் சுமார் 50 விமான சாரணர்கள் இணைந்திருப்பதும் சிறப்பம்சம் ஆகும் 

சாரணிய செயற்பாடுகளின் ஊடாக மாணவர்களிடம் தலைமைத்துவம், ஒழுக்கம், உடல் ஆரோக்கியம், சமூகப் பொறுப்பு மற்றும் சேவை மனப்பான்மை போன்ற பண்புகளை வளர்க்க முடியும் 

2027 ஆம் ஆண்டு இலங்கை சாரணர் சங்க ஜம்போரி கோமாகம பிரதேசத்தில் ஜனவரி 17 முதல் 23 வரை நடைபெறவுள்ளது. 

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து அதிகபட்சமாக300 சாரணர்கள் பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

இதில் நல்லூர் உற்சவ சாரணர் சேவையில் அதிக மணித்தியாலங்கள் கடமையாற்றிய முதல் 50 சாரணர்கள், ஜம்போரிக்கான தெரிவில் விசேட அடிப்படையில் உள்வாங்கப்படவுள்ளனர் என தெரிவித்தார் 












No comments