தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை ஆகிய இடங்களுக்கு இடையில் இடம்பெற்ற பல வாகனங்கள் மோதிய விபத்தில் 10 க்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும், வேறு சில வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்றபோது இரண்டு பேருந்துகளும் ஆறு மோட்டார் வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் கூறப்படுகிறது.
இவ்விபத்து காரணமாக அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்துச் செயல்பாடுகளில் ஏற்பட்ட தற்காலிகத் தாக்கங்கள் குறித்தும், காயமடைந்தவர்களின் தற்போதைய நிலை குறித்தும் மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன
















No comments