ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் கிரிக்கெட் அகாடமியின் ஏற்பாட்டில் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான உள்ளரங்க மென்பந்து துடுப்பாட்ட போட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
வர்த்தக நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசுத் திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச & தனியார் துறை நிறுவனங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும், 7 வீரர்கள் கொண்ட, 6 பந்து பரிமாற்றங்களை கொண்ட உள்ளரங்க மென்பந்து துடுப்பாட்ட போட்டியாக நடைபெறவுள்ளது.
ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் கிரிக்கெட் அகாடமியில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் வாரம் முதல் பகல் இரவு போட்டிகளாக நடைபெறவுள்ள போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொள்ளும் அணிக்கு ஒரு இலட்ச ரூபாய் பண பரிசில் வழங்கப்படவுள்ளதுடன் . முதலாம் இரண்டாம் இடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் பண பரிசில் வழங்கப்படவுள்ளது
போட்டிகள் சுற்றுப்போட்டிகள் (லீக்) அடிப்படையில் நடைபெறவுள்ளதுடன் போட்டிகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு +94 77 999 3949 மற்றும் +94 77 192 7081 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.









No comments