Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மன்னாரின் பாரம்பரியங்களை பாதுகாத்து சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும்


மன்னாரின் தனித்துவமான அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாத்து, அவற்றைச் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியுடன் இணைப்பது காலத்தின் தேவையாகும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

மன்னாரில் நடைபெற்ற ,  உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் இறுதிநாள் நிகழ்வில் , பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

மன்னார் மாவட்டம் இயற்கை வளங்கள், அழகிய கடற்கரைகள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் தனித்துவமான பண்பாட்டு மரபுகளைக் கொண்ட முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. 

இவ்வளங்களை முறையாகப் பயன்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம், பிரதேச மக்களுக்குப் புதிய வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதுடன், உள்ளூர் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த முடியும்.

மன்னாரின் தனித்துவமான அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாத்து, அவற்றைச் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியுடன் இணைப்பது காலத்தின் தேவையாகும். 

இத்தகைய விழாக்கள் மன்னாரின் சுற்றுலாத்துறை சாத்தியங்களைப் பரந்தளவில் வெளிப்படுத்துவதுடன், உள்ளூர் உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளைப் பரந்த மக்களிடம் அறிமுகப்படுத்துவதற்கும் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்துகின்றன என தெரிவித்தார். 

No comments