களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
அனுராதபுரம் நோக்கி பயணிப்பதற்காக களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தின் வலது பக்கமாக நடைமேடையை நோக்கி ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோதே இவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.
மருதானையிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் இவர்கள் மோதியதாக களுத்துறை ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதில் தாயும் அவரது மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









No comments