Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தியாக தீபத்தின் நினைவேந்தலால் தனக்கு மனவுளைச்சலாம் - சுன்னாகத்தில் பெண்ணொருவர் முறைப்பாடு


தியாக தீபத்தின் திருவுருவ படம் வைத்து தினமும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறுவதனை பார்க்கும் போது தனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதாக பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் 

வலி. தெற்கு பிரதேச சபையினரால் , சுன்னாகம் பகுதியில் உள்ள தமது தலைமை காரியாலயம் முன்பாக விசேட கொட்டகை அமைக்கப்பட்டு , தியாக தீபம் திலீபனின் திருவுருவ படம் வைத்து தினமும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன 

இந்நிலையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளால் தனக்கு கடுமையான மனவுளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் ,அதனால் அதனை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

No comments