சவூதி அரேபியச் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை, கருணை மற்றும் மன்னிப்பின் அடிப்படையில் சவூதி அரசும் சவூதி மன்னரும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசேட அமைதி வழி அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இப்போராட்டம் நடைபெற்றது
போராட்டத்தின் இறுதியில், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாடு முழுவதிலும் உள்ள சுமார் 1,000 இந்து அமைப்புக்கள் மற்றும் திருக்கோயில்களின் பிரதிநிதிகளிடம் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெறப்படும் கையெழுத்துக்களை உள்ளடக்கிய மகஜர் தயார் செய்யப்பட்டு இலங்கை அரசு, சவூதி அரேபிய அரசு, இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் முறைப்படி கையளிக்கப்படவுள்ளது.












No comments