Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஈ.பி.டி.பி தலைமை அலுவலகத்தில் மணித்தியாலக் கணக்கில் தேடுதல்


ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் குற்றப்புலனாய்வு துறையினர் நீண்ட நேரம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

தேடுதல் நடவடிக்கையை அடுத்து , கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நிர்வாக பொறுப்பாளர் ஆகியோரிடம் வாக்கு மூலங்களையும் பெற்று சென்றுள்ளனர். 

குற்ற புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தேடுதல் அனுமதியினை பெற்று இன்றைய தினம் குறித்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் 

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள முந்தைய காலத்தில் ஸ்ரீதர் திரையரங்கு இயங்கிய கட்டடத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நீண்ட நேரம் தேடுதலில் ஈடுபட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் , இறுதியில் செயலாளர் மற்றும் நிர்வாக பொறுப்பாளர் ஆகியோரிடம் வாக்கு மூலம் பெற்று சென்றுள்ளனர் 

கடந்த 2001ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம்  கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் , பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதேவேளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் மீள கையளிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் தொடர்பிலான விசாரணைகளும் நடைபெற்றது என்பதுடன் , ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தகவல்களை வெளியிட்ட ஆசாத் மௌலானாவிற்கு வேலை வாய்ப்பு வழங்கியமை தொடர்பிலும் அண்மையில் டக்ளஸ் தேவானதாவிடம்  குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 

இவ்வாறான பின்னணியில் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தினை குற்றப்புலனாய்வு துறையினர் சோதனையிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

No comments