யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்
மானிப்பாய் பகுதியில போதை மாத்திரை வியாபாரத்தில் இளைஞர்கள் ஈடுபடுவதாக கிடைக்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து 500 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்









No comments