Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டி


வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகளும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன. 

கடந்த 9ஆம் திகதியும் இன்றைய தினமும் இணைந்து மொத்தம் 157 வகையான போட்டிகள் நடைபெற்றன. 

போட்டியின் ஆரம்பத்தில், நிகழ்வுக்கு வருகைதந்த விருந்தினர்கள், மாற்றுத்திறனாளிகளின் இசைக்குழு அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டனர். 

அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதுடன், தேசியக் கொடி, மாகாணக் கொடி மற்றும் மாவட்டக் கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன. பின்னர் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, சத்தியப்பிரமாண நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து மேடை நிகழ்வுகள் நடைபெற்றன

போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசில்களை ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் வழங்கிக் கௌரவித்தனர். 

இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலர், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், வடக்கு மாகாண கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.








No comments