Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்ப்பாணத்தில் ஆறுதல் பராமரிப்பு நிலையம் திறப்பு: இறுதி கட்ட நோயாளிகளுக்கு இலவச சேவை!


வாழ்வின் இறுதி கட்டத்தில் உள்ளவர்கள், தங்களை தாங்களே காப்பாற்ற முடியாதவர்கள், மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவிலோ அல்லது வீட்டிலோ வைத்து பராமரிக்க முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இறுதிவரை முறையான பராமரிப்பு வழங்குவதை இந்த நிலையம் நோக்கமாகக் கொண்டுள்ளது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி, சரசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'கம்ஃபர்ட் கெயார் ஹோம்' (Comfort Care Home) எனப் பெயரிடப்பட்டுள்ள வலிதணிப்புப் பராமரிப்பு இல்லத்தின் (Palliative Care Home) திறப்பு விழா நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

இந்த நிலையத்தின் சேவையாக , நோயாளிகளுக்கு இறுதிவரை கவனிப்பு வழங்குவதுடன், குறிப்பாக அவர்களுக்கு ஏற்படும் வலிகள் (Pain) மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான சேவைகள் வழங்கப்படுகின்றன 

இந்த சேவை இது முற்றிலும் இலவசமான சேவையாகும்.இச்சேவையைப் பெற விரும்புபவர்கள், ஏதேனும் ஒரு வைத்தியசாலை ஊடாகவோ அல்லது மருத்துவர் ஒருவரின் சிபாரிசின் (Recommendation) பெயரிலோ சில தகவல்  மற்றும் விவரங்களை வழங்கிய பின்னர், முறையான அனுமதி பெற்று நோயாளிகளை இங்கு வைத்து பராமரிக்க முடியும்.

.சுகாதார அமைச்சின் முழுமையான அனுசரணையோடு, எதிர்காலத்தில் இந்தச் சேவை மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளதால், ஏனைய நண்கடையாளர்களும் தங்களது உதவிகளை வழங்கி பங்களிப்பு செய்ய முடியும் என தெரிவித்தார். 

No comments