Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சங்குப்பிட்டி பாலத்தின் ஊடான போக்குவரத்திற்கு தடை


யாழ்ப்பாணம் - மன்னார் (A32) பிரதான வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டிப் பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக 5 நாட்களுக்கு குறித்த வீதி மூடப்படவுள்ளது.

பாலத்தின் திருத்த பணி காரணமாக நாளைய தினம் புதன்கிழமை முற்பகல் 8.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 8.00 மணி வரை, ஐந்து நாட்களுக்கு சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடான அனைத்து வகையான வாகனப் போக்குவரத்தும் முற்றாகத் தடைசெய்யப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் சங்குப்பிட்டிப் பாலம் ஊடாகப் பயணிக்கத் திட்டமிடும் பொதுமக்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகன சாரதிகளும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

திருத்தப் பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாக நிறைவடைந்தால், சங்குப்பிட்டிப் பாலம் முன்கூட்டியே போக்குவரத்துக்காகத் திறக்கப்படும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments