Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். பிடல் காஸ்ட்ரோவின் 100ஆவது பிறந்தநாளை கொண்டாட்ட ஏற்பாடு


வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள முதலாவது கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் பெட்ரிசியா லாசாரா பெகோ குவேராவுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த கியூபத் தூதுவர், 

வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் முதலாவது கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துடனான கியூபாவின் உறவுகளை வளர்ப்பதற்கான புதிய வாசலைத் திறந்துள்ளது.

இலங்கையின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் விளங்குகின்றது. கியூபாவின் முக்கிய தலைவரான பிடல் காஸ்ட்ரோவின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பிடல் காஸ்ட்ரோ மற்றும் கியூபா தொடர்பில் தாம் பல விடயங்களை அறிந்துள்ளோம்.

 முதல் தடவையாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள தூதுவரை வடக்கு மாகாண மக்கள் சார்பில் வரவேற்பதில் மகிழ்ச்சி என ஆளுநர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளங்கள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.








No comments