Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணி புதைகுழி: இடைக்கால அறிக்கை அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுக்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை


செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை, கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் பிரதிகளை இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய, சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிக்கையை ஆராய்ந்து தங்களது கருத்துகளையும் அவதானிப்புகளையும் நீதிமன்றத்தில் முன்வைக்கவுள்ளனர்.

மேலும், செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் காலத்தை அறிவியல் ரீதியாகக் கண்டறியும் வகையில், கார்பன் கால நிர்ணயச் சோதனையை மேற்கொள்வதற்கான அனுமதியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

இந்தக் கோரிக்கை தொடர்பான முக்கிய தீர்மானத்தை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி நீதிமன்றம் அறிவிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

No comments