Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து புங்குடுதீவு மாணவர்கள் நடைபவனி


யாழ்ப்பாணம் புங்குடுதீவில் உள்ள மதுபான சாலையை அகற்றுமாறும் , தமது கல்வி வளர்சியில் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என கோரி புங்குடுதீவு மாணவர்களினால் நடைபவனி  முன்னடுக்கப்பட்டது. 

புங்குடுதீவு மகாவித்தியாலயம் முன்பாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான மாணவர்கள் நடைபவனி  , பெருங்காட்டு ஆலயத்தை சென்றடைந்தது. 

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சிறுவர்களின் கல்விக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

தீவகப் பகுதிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.

புங்குடுதீவு தீவின் மத்தியில் அமைந்துள்ள மதுபானசாலையை அகற்ற வேண்டும்.

சிறுவர்களுக்கு பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதுமான சமூகச் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

சிறுவர்களின் உரிமைகள் மற்றும் கல்வி உரிமையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வந்தே மாணவர்கள் நடைபவனி மேற்கொண்டனர்.







No comments