இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் டாக்டர் பாட்ரிசியா லசாரா பெகோ குவேரா மூன்று நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை, தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வரவேற்றனர்.
தூதுவர் தனது மூன்று நாள் விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.












No comments