Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புவி வெப்பமயமாதலால் இலங்கைக்குப் பாரிய அச்சுறுத்தல்


புவி வெப்பமயமாதலுடன் பணியிடங்களில் ஏற்படும் வெப்பநிலையின் தாக்கம் காரணமாக, 2040ஆம் ஆண்ட ஆண்டிற்குள் இலங்கைக்கு சுமார் 145,000 முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு உற்பத்தித்திறன் இழப்பு ஏற்படக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளிப்படுத்தியுள்ளது.

அந்த அமைப்பு நடத்திய புதிய ஆய்வின்படி, இதன் காரணமாக இலங்கை மற்றும் மாலைத்தீவின் தொழிலாளர்கள், உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதாரங்கள் ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகி வருகின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக அதிக வெப்பநிலை காரணமாக தொழிலாளர்கள் அதிக நேரம் ஓய்வெடுக்க வேண்டியிருத்தல், வேலை செய்யும் வேகம் குறைதல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் போன்றவை இந்நிலைக்குக் காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வரவிருக்கும் சில தசாப்தங்களில் இலங்கை மற்றும் மாலைத்தீவின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் ஏற்படும் தாக்கங்கள் மேலும் தீவிரமடையக்கூடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையினால் 2040ஆம் ஆண்டிற்குள் இலங்கையின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் ஒட்டுமொத்த இழப்பு சுமார் 26 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக திறந்தவெளியிலும் அதிக உடலுழைப்பைச் செலுத்தியும் வேலை செய்யும் விவசாயம் மற்றும் சேவைத் துறைகளே அதிக வெப்பநிலை காரணமாக அதிகம் பாதிக்கப்படும் முதன்மைத் துறைகளாகும் என அந்த அமைப்பு கூறுகிறது.

இந்தச் சூழ்நிலையிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக இலங்கையில் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்றும், பணியிடங்களில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது

சூரிய வெளிச்சமும் வெப்பமும் அதிகமாக இருக்கும் நேரங்களைத் தவிர்க்கும் வகையில் வேலை நேரங்களைத் திருத்தியமைத்தல், வேலை நேரத்தில் ஓய்வெடுப்பதற்கான முறையான அட்டவணைகளைத் தயாரித்தல், பணியிடங்களில் நிழல் மற்றும் போதுமான குடிநீர் வசதிகளை வழங்குதல் போன்றவை அதில் அடங்கும்.

No comments