Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இரசாயனமற்ற பழங்களை விற்பனை செய்ய வர்த்தகர்களுக்குச் சான்றிதழ்: யாழ்ப்பாணத்தில் புதிய திட்டம்!


யாழ்ப்பாணத்தில், தரமான பழங்கள் கிடைக்கக்கூடிய விற்பனை நிலையங்களை அடையாளம் கண்டு, அவற்றின் விபரங்களை உள்ளடக்கிய வரைபடம்  ஒன்றைத் தயாரிக்கவும், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் தரவுகளைச் சேகரித்து, முறையானதும் வினைத்திறனானதுமான வர்த்தகச் சேவையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை மற்றும் நிறை, அளவைகள் உத்தியோகத்தர்களுடன்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடினர். 

அதன் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், தரமான பொருட்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்கும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது 

 யாழ்ப்பாண மாவட்டத்தில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் செயற்பாடுகள், எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதே இக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும் குறிப்பாக, சந்தைகளில் இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுவது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது 

 பழங்களை விரைவாகப் பழுக்க வைப்பதற்கும் நீண்டகாலம் பழுதடையாமல் பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் மக்களின் உடல்நலத்திற்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன 

இவ்விடயம் தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் இச்செயற்பாடுகளை முழுமையாக நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது 

இதன் முதற்கட்டமாக, பழங்கள் மற்றும் மரக்கறிகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களைப் பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

இதன் மூலம் தரமான மற்றும் பாதுகாப்பான விற்பனை முறையை உறுதிப்படுத்த முடியும். ஏப்ரல் முதலாம் திகதி முதல் பதிவு செய்யப்பட்டு, உரிய தரநிலைகளைப் பின்பற்றும் வர்த்தகர்களுக்கு இரசாயனப் பாதிப்பற்ற இயற்கையான பழங்களை விற்பனை செய்வதற்கான சான்றிதழ் வழங்கப்படும்

அதனைத் தமது விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்தி, நுகர்வோரின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியும்  

அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் தரமான பழங்கள் கிடைக்கக்கூடிய விற்பனை நிலையங்களை அடையாளம் கண்டு, அவற்றின் விபரங்களை உள்ளடக்கிய வரைபடம்(Map) ஒன்றைத் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் இரசாயனக் கலப்பற்ற பாதுகாப்பான பழங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்  

மேலும், குடிநீர்ப் போத்தல்களைப் பரிசோதித்தல், வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நுகர்வோர் முறைப்பாடுகளை விசாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் 

சிறிய அளவிலான மோசடிகள் கூட பொதுமக்களுக்கு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்  குறிப்பாக டிஜிட்டல் தராசுகளில் இடம்பெறும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், நுகர்வோரின் நலன்களை முன்னிறுத்திச் செயற்பட வேண்டும்  

அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் தரவுகளைச் சேகரித்து, முறையானதும் வினைத்திறனானதுமான வர்த்தகச் சேவையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார் 

No comments