Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

போதையில் பேருந்தை இயக்கி விபத்து: ஊர்காவற்துறை வீதியில் சாரதி கைது!


யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறைக்கு பயணிகளை ஏற்றி சென்ற பேருந்தின் சாரதி போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் 

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறைக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணிகளை ஏற்றி சென்ற பேருந்தும் , முச்சக்கர வண்டியொன்றும், யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் அராலி சந்திக்கு அருகில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தில் , முச்சக்கர வண்டியில் பயணித்த இரு சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர் 

அதனை தொடர்ந்து விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் பேருந்து சாரதியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு , போதைப்பொருள் பாவித்துள்ளாரா என்பது தொடர்பில் பரிசோதனை செய்துள்ளனர்.

பரிசோதனையில் , சாரதி போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து , சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் 

 

No comments