Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொழும்பில் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு


இடைக்கால பருவக்காற்று (Inter-monsoon) தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் நாட்டில் பலத்த மழை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் நிலைய தரவுகள் தெரிவிக்கின்றன.  

இதன்படி கொழும்பில் 129 மில்லிமீற்றரும், மத்துகமவில் 95 மில்லிமீற்றரும், பதுரலியவில் 84 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்தக் கனமழை காரணமாக பல பகுதிகளில் வௌ்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.  

கொள்ளுப்பிட்டியில் இருந்து காலி வீதி வரையான பகுதிகள், பொரளை, மருதானை மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட கொழும்பு நகரின் பல பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிவேக நெடுஞ்சாலைகளின் பிரவேசப் பகுதிகளுக்கு அருகிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், நாவலப்பிட்டி நகரத்தின் பஸ் நிலையம் மற்றும் நாவலப்பிட்டி-கண்டி பிரதான வீதியின் சுமார் ஒரு கிலோமீற்றர் வரையான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

இதேவேளை, கொழும்பில் பெய்த கனமழை காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அனைத்து வழித்தடங்களிலுமான ரயில் சேவைகளும் பிற்பகலில் பெரும் தாமதத்தை எதிர்நோக்கின.  

தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையைக் கருத்தில் கொண்டு, இயன்றவரை அவதானத்துடன் செயற்படுமாறும், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் நாட்டின் பல மாவட்டங்களில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை அவதானிப்பகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 







 

No comments