Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானப் பணிகள் ஒரு வருடத்திற்குள் பூர்த்தி: அமைச்சர் சுனில் குமார கமகே உறுதி


யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாண பணிகளை ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்வோம் என இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உறுதியளித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர்  இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்டார் 

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணத்தில் அமையவுள்ள  கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் பணிகள் சில காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. 

இதற்குத் தேவையான சுற்று சூழல் சார்ந்த சில அறிக்கைகளை பெற வேண்டியும். ,மேலும் சில அறிக்கைகளை பெற வேண்டியும் இருந்தன அவை தற்போது பெறப்பட்டுள்ளது 

அதனால் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் இந்த மைதானத்தின் நிர்மாணிப்பு பணி மீள தொடங்கப்படும் 


அதேவேளை இந்த மைதானத்தில், மழைக்காலத்தில் வெள்ள நீர்  நிரப்புகிறது என சமூக ஊடகங்களில் பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். 

இன்று யாழ்ப்பாணத்தில் மழை பெய்கிறது. இந்த மழைக்காலத்தில் தான் இந்த மைதானத்தை பார்வையிட வந்துள்ளோம். உண்மையில் இங்கு நீர் தேங்கவில்லை. 

மைதானம் அமையவுள்ள பகுதியில் நிலம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும், உயர்த்தப்பட வேண்டும். மைதானத்தில் வெள்ளம் நிற்கும் என கூறுபவர்கள், இப்போது வந்து மைதானத்தில் நீர் தேங்குகிறதா இல்லையா என்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். 

இன்னும் ஓரிரு வாரங்களில் பணிகள் தொடங்கப்படும். மிகக் குறுகிய காலத்திற்குள் இதனை நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளோம்..ஜனாதிபதி உறுதியளித்த விதத்தில் எதிர்வரும் வருடத்திற்குள் பொதுமக்கள் கிரிக்கெட் விளையாடக்கூடிய வகையில் இந்த மைதானம் அமைத்துத் தரப்படும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் 

ஜனாதிபதி நேரில் வந்து இதன் பணிகளை ஆரம்பித்த இடம் என்பதால், கிரிக்கெட் வீரர்களுக்கு இது ஒரு சிறந்த மைதானமாக அமையும் என தெரிவித்தார். 








No comments