Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மட்டக்களப்பில் மரண தண்டனை பெற்ற 8 பேரும் ராசிக் குழுவைச் சேர்ந்தவர்களாம்


மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையின் வழிநடத்தலில் செயற்படாதவர்கள் என்றும் ,  அவர்கள் ராசிக் குழுவை சேர்ந்தவர்கள் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக. மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று 8 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இவர்கள் எமது கட்சியின் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தவர்கள் கிடையாது.

கடந்த காலங்களில் பல்வேறு போராட்ட இயக்கங்களில் இருந்து பிரிந்தவர்கள் குழுக்களாக எமது பிரதேங்களில் செயற்பட்டுள்ளனர்.

அவ்வாறு புளொட் அமைப்பிலிருந்து பிரிந்து ராசிக் குழுவினருடன் இணைந்து செயற்பட்ட இவர்கள், ராசிக் படுகொலை செய்யப்பட்ட பின்னர் தனியாக செயற்பட்டு வந்தனர்.

இந்நிலையில், 2000 ஆண்டுகளின் நடுப் பகுதியில் எமது மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளை பேணியிருந்தனர்.

இந்நிலையிலேயே 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்திற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்த வரையில், எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளிப்படுத்துவது போன்று, சமூக விரோத மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவது கட்சியின் கொள்கையோ வேலைத் திட்டமோ இல்லை.

அவ்வாறு ஏதாவது நடைபெறுமாயின் அவை தனிநபர் தவறுகளாகவே இருக்கும். அவற்றை நீதிமன்றங்களின் ஊடாக அணுகப்பட வேண்டும் என்பதும் நீதிமன்ற செயற்பாடுகளை மதிக்க வேண்டும். என்பதே எமது நிலைப்பாடு.

இவ்வாறான செய்திகள் எமது செயற்பாட்டாளர்களையும் ஆதரவாளர்களையும் மக்களையும் சோர்வடைய செய்யக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு" என்று தெரிவித்துள்ளார்

No comments