Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ் மாநகர சபையின் 25 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு: நிர்வாகத்தின் அலட்சிய போக்கிற்கு சி.வீ.கே கண்டனம்!


யாழ் மாநகர சபையின் 25 கோடி ரூபாய் பெறுமதியான சொத்தொன்று மோசடியாக அபகரிக்கப்பட்டமை பற்றி மாநகர சபை நிர்வாகத்தின் அலட்சியபோக்கு கண்டிக்கத்தக்கது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜாவுக்கு தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜாவுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில், 

யாழ்ப்பாணம் முன் வீதி அல்லது இராசேந்திர பிரசாத் வீதியின் மேற்கு புறமாக புதிதாக அமைக்கப் பட்டு வரும் கட்டிட காணிக்கு கிழக்காக யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உரித்தான நிலப்பரப்பு 04 குளி 09 விஸ்தீரணம் கொண்ட காணி மோசடியாக அபகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தேர்தல் மூலமான சபை பதவி ஏற்ற 2025 ஜூன் மாதம் முதல் நான் சுட்டிக் காட்டி வந்த போதும் காத்திரமான எந்த நடவடிக்கை எதுவும் இது வரை எடுக்கப் படாமை மிகவும் வருத்தத்திற்கு உரியது.

ஆகக் குறைந்தது இருபத்தைந்து கோடி பெறுமதியான இந்த சொத்து மோசடியாக அபகரிக்கப்பட்டமை பற்றி மாநகர நிர்வாகத்தின் அலட்சிய போக்கு கண்டிக்க தக்கது

இது இவ்வாறு இருக்கையில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் மாநகரசபை காணிகள் தொடர்பாக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது

எனவே மேற்குறிப்பிட்ட விடயத்தை வெகு முக்கியம் வாய்ந்த விடயமாக எடுத்து இந்த குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறித்துவதுடன் அடுத்த நான்கு வாரத்திற்குள் எடுக்கப் பட்ட நடவடிக்கை பற்றிய முன்னேற்றத்தை எமக்கு அறியத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விடயம் தொடர்பாக மக்கள் அறிதலுக்காக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து வந்தது போல இந்த கடிதமும் ஊடகங்களுக்கு வழங்கப்படுகிறது - என்றுள்ளது

No comments