யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 4ஆம் நாள் மாலை உற்சவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
கந்தசஷ்டி விரதம் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த நிலையில் ,நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 4ஆம் நாள் மாலை உற்சவம் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது,
நான்காம் நாள் உற்சவத்தில் வெள்ளி எருது வாகனத்தில் முருக பெருமான் வெள்ளி அலங்காரங்களுடன் எழுந்தருளி வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
கந்தசஷ்டி விரத இறுதிநாளான நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , ஆறுமுக சுவாமி , ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்யும் சூரன் போர் ஆலய வெளி வீதியில் இடம்பெறவுள்ளது.

















No comments