யாழ்ப்பாணம் , திருநெல்வேலி சைவச் சிறுவர் ஆண்கள் இல்ல மாணவன் ஒருவனுக்கு , அங்கு கற்பிக்க வந்த ஆசிரியர் மூர்க்கத்தனமாக தாக்கியதில் , மாணவன் தலையில் காயமடைந்துள்ளான்.
குறித்த சம்பவத்தினை மூடி மறைக்கும் முகமாக , மாணவனை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சைவ சிறுவர் இல்ல மாணவர்களுக்கு இரவு நேர கற்பித்த நடவடிக்கைக்காக ஆசிரியர் ஒருவரை , இல்லத்தின் முகாமைத்துவ சபையின் அனுமதியின்றி வித்திய விருத்திச்சங்கத்தின் கல்வித்திட்டப்பணிப்பபாளரின் பரிந்துரையில் இல்லத்திற்கு முறையற்ற விதத்தில் ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியரின் தவறான நடத்தைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முகாமைத்துவ சபையின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் முன் வைத்து வந்த போதிலும் , அதனை சங்க தலைவர் உள்ளிட்டவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது பொறுமை காத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் , குறித்த ஆசிரியரினால் மாணவன் ஒருவன் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளான். ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் தலையில் காயமடைந்த நிலையில் , 3 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள யாழ்.போதனா வைத்தியசாலை, அனுமதிக்காது , சுமார் 5 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இணுவில் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது
அரச வைத்தியசாலையில் மாணவனை அனுமதித்தால் , சட்ட நடவடிக்கைளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற காரணத்தால் , தனியார் வைத்தியசாலையில் மாணவனை அனுமதித்து , சம்பவத்தை மூடி மறைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன
மாணவன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டு, பொலிஸார் ஊடாக சிறுவர் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அவை தொடர்பில் சைவ வித்தியா விருத்தி சங்க நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்பதுடன் சம்பவம் தொடர்பில் சிறுவர் நன்னடத்தை பிரிவினருக்கு தெரிந்து இருந்தும் மாணவன் மீதான தாக்குதல் குறித்து விசாரணைகளையோ , நடவ்டிக்கைகளையோ எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.
அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் , ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்பட்ட முறைமை தவறு என கூறி நடவடிக்கை எடுக்க கோரிய சைவ வித்தியாவித்தியா விருத்திச்சங்கத்தின் பொதுச்சபை செயலாளர் மீது , நிர்வாகத்தை சேர்ந்த சிலர் தாக்க முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
மாணவன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிறுவர் நன்னடத்தை திணைக்களம் , சிறுவர் நீதிமன்று , வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட தரப்பினர் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு உரிய முறைப்படி கடிதம் மூலம் முறைப்பாடுகளை வழங்கியுள்ளதாக , செயலாளர் தெரிவித்துள்ளார்









No comments