நாடளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை சுகயீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனால் அரச அலுவலகங்ககளில், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டதுடன், சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த பொதுமக்களும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.
சம்பள உயர்வு, பதவி உயர்வில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.









No comments