Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்; மனைவியிடம் ரி.ஐ.டி விசாரணை!


யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரது வீட்டிற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி நல்லதம்பி சிறிகாந்தா தெரிவித்துள்ளார். 

வல்வெட்டித்துறை நகர சபையின் நகர பிதாவான எம்.கே சிவாஜிலிங்கத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

அதனை தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமான நிலையில் ,  தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் , ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறையில் உள்ள சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் , அவரது மனைவியிடம் நீண்ட நேரம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் , எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றில் சிவாஜிலிங்கம் முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணை வழங்கி சென்றுள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பில் சட்டத்தரணி எனும் ரீதியில் குடும்பத்தினரால் எனக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த நல்லதம்பி சிறிகாந்தா, 

மரண படுக்கையில், சிவாஜிலிங்கம் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் போது , அவரது குடும்பத்தினரை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கும் வகையிலும் , அவர்களுக்கு நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் விடுக்கும் முகாமாக , சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர்,  அவரது மனைவியிடம் நீண்ட நேரம் விசாரணைகளை முன்னெடுத்தமையை வன்மையாக கண்டிக்கின்றோம் என மேலும்  தெரிவித்தார்.

No comments