பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோரின் செயற்பாடுகள் தொடர்பில் ஆரம்பப் புலனாய்வு விசாரணைகளை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பருத்தித்துறை நகர சபை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட சுயாதீன விசாரணை அறிக்கையில், நகர சபையின் முன்னாள் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோரின் சில செயற்பாடுகள் நகர சபையின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக அமையவில்லை
மேலும், தமது பதவிகளைப் பயன்படுத்தி நிர்வாகச் சீர்கேடுகளுக்கு வழிவகுத்தமை மற்றும் உயர் அதிகாரிகளுக்குத் தவறான வழிகாட்டல்களை வழங்கியமை தொடர்பான அவதானிப்புகளும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளரிடம் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை முன்வைத்து, தற்போதைய நகர சபையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்த முயற்சித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், முன்னாள் செயலாளரின் செயற்பாடுகள் தொடர்பில் ஆரம்பகட்டப் புலனாய்வை மேற்கொள்ளவும், தொழில்நுட்ப உத்தியோகத்தர் தன்னிச்சையாக மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்தும் ஆரம்பகட்டப் புலனாய்வுகளை முன்னெடுக்கவும் உரிய ஒழுக்காற்று அதிகாரிகள் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்









No comments