கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் யுவதியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சிறுவன் உள்ளிட்ட மூவரும் போதைப்பொருள் பாவித்திருந்தமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
சாந்தபுரம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய யுவதியை அப்பகுதியை சேர்ந்த 17, 18 மற்றும் 20 வயதுடைய நபர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்
அதில் பாதிக்கப்பட்ட யுவதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அப்பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , மூவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது , மூவரும் , போதைப்பொருள் பாவித்திருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது
அதனை தொடர்ந்து மூவரிடமும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









No comments