Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முன்னைய அறிக்கைகளிலிருந்து முரண்படும் ராஜ் சோமதேவாவின் அறிக்கைக்கு நியாயமான காரணங்கள் இல்லை


செம்மணி மனித புதைகுழி தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்திற்கு இறுதியாக சமர்பித்த இடைக்கால அறிக்கை முன்னர் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஏனைய அறிக்கைகளில் இருந்து வேறுபடுகிறது என்பதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அதன் மீது தங்கி இருந்து எதிர்கால நடவடிக்கையை தீர்மானிக்க தேவையில்லை என கட்டளையிட்டது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு தொடர்பான வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை  நீதிவான் செ.லெனின்குமார் மற்றும் மேலதிக நீதிவான் உசைன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றபோது நீதிவான் லெனின்குமார் இதனை தெரிவித்தார்

இடைக்கால அறிக்கை முதல் மூன்று அறிக்கையில் இருந்து ஏன் வேறுபடுகிறது என்ற நியாயமான காரணங்கள் முன்வைக்கப்படவில்லை என்ற கேள்வி பங்குபற்றுநர்களால் எழுப்பப்பட்ட நிலையில் அதன் காரணங்கள் மன்றினால் கண்டறிய முடியவில்லை என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கை மீது தங்கி இருந்து எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்க தேவையில்லை. என நீதவான் தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட தரப்புகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், வி.எஸ்.நிரைஞ்சன், ரனித்தா ஞானராஜா, யூட் தினேஷ், கு.குருபரன், வி.மணிவண்ணன், க.சுகாஷ், பெனிஸ்லஷ் துஷான் உள்ளிட்ட இருபது வரையான சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்ததுடன் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் சார்பில் சட்டத்தரணிகளான மீராக் ரஹீம், பூரணி மரியநாயகம் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

மேலும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், தடயவியல் பொலிஸ் அதிகாரி, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சித்துப்பாத்தி இந்து மயான நிர்வாகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments