Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நாட்டில் பரவலான மழைக்கு வாய்ப்பு: வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை!


எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் பரவலான மழை பொழியும் எனவும் ,  4ஆம் திகதி வரை வடக்கு கிழக்கு கடற்தொழிலாளர்களை கடற்தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும், புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா  அறிவித்துள்ளார். 

அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

தாய்லாந்துக்கு மேற்கே உருவாகிய தாழமுக்கம் வடமேற்கு மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது மத்திய வங்காள விரிகுடாவில் உள்ளது. 

அது வடமேற்கு மேற்கு திசை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து எதிர்வரும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள மசிலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த தாழமுக்கம் காரணமாக நாளைய தினம் திங்கட்கிழமை முதல் இலங்கையின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் சற்றுக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

அந்த வகையில் நாளைய தினம் திங்கட்கிழமை கிழக்கு , ஊவா, மத்திய, மேற்கு, சப்ரகமுவா, தெற்கு மாகாணங்களில் மிதமானது முதல் சற்றுக் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

அதேவேளை எதிர்வரும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் பரவலாக மிதமானது முதல் சற்றுக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதனால் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் வடக்கு, கிழக்கு, கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் எதிர்வரும் 04ஆம் திகதி மாலை வரை கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது.

அதேவேளை எதிர்வரும் 07ஆம் திகதி மீண்டும் ஒரு தாழமுக்கம் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகும் வாய்ப்புள்ளது. இது இலங்கையின் பல பகுதிகளுக்கும் பரவலாக கணிசமான அளவு மழையைப் தரும் வாய்ப்புள்ளது என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments