ஒஸ்லோ நகருக்கு அருகாமையில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின்மீது 2019இல் தாக்குதல் நடத்திய வலதுசாரி தீவிரவாதி பிலிப் மான்ஷோஸுக்கு நோர்வே நீதிமன்றமொன்று 21 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது.
அந்த சம்பவத்தில் தாக்குதல்தாரி தனது ஒன்றுவிட்ட சகோதரியை இனவெறிகொண்டு கொலை செய்திருந்தார்.
கூடுமானவரை அதிகளவிலான முஸ்லிம்களை கொலை செய்ய முயற்சித்ததில் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
ஆனால், பள்ளிவாசல் தாக்குதலின்போது வேறு எவருக்கும் பாரதூரமான காயம் ஏற்படவில்லை.
பிலிப் மான்ஷோஸுக்கு (Philip Manshaus ) குறைந்தபட்சம் வருட சிறைக்காவல் தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் ஒன்று கடந்த வியாழக்கிழமை அறிவித்தது, நீதிபதி அனிகா லிண்ட்ஸ்ட்ரோம் ( Annika Lindstroem) இத்தீர்ப்பை அளித்தார்.
நோர்வேயில் சிறைக்காவல் தண்டனை என்பது காலவரையறையின்றி நீடிக்கக்கூடியதாகும்.
நியோ-நாசி என தன்னைத்தானே சுயமாக பிரகடனப்படுத்திக்கொண்ட 22 வயதான மான்ஷோஸ், 2019 ஆகஸ்ட் 10ஆம் திகிதி அல் நூர் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டார்.
ஒஸ்லோவின் புறநகரான பேறும் என்ற இடத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தியபோது அவர் குண்டுதுளைக்காத அங்கியையும் கெமரா பொருத்தப்பட்ட தலைக்கவசத்தையும் அணிந்திருந்தார்.
தாக்குதல் நடத்தப்பட்டபோது மூன்று தொழுகையாளர்கள் மாத்திரமே பள்ளிவாசலில் இருந்துள்ளனர். அவர்களில் 65 வயதான ஒருவர் கொலையாளியான மான்ஷோஸை கட்டுப்படுத்தியுள்ளார்.
‘கூடுமானவரை பல முஸ்லிம்களை கொள்வது மாத்திரம் தனது திட்டம் அல்லவெனத் தெரிவித்த மான்ஷோஸ், சமுதாயத்தைக் குழுப்பத்தில் ஆழ்த்தி இனக்கலவரத்தை மூட்டிவிடுவதாகும்’ என்ற அவரது சாட்சியத்தை நிதிமன்றம் தனது தீர்ப்பு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
17 வயதான அவரது ஒன்றுவிட்ட சகோதரி ஜொஹேன் ஸங்ஜியா இஹ்லே-ஹன்செனின் சடலம் அவர்களது வீட்டிலிருந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
நோர்வேயில் ஆயுட்கால சிறைத்தண்டனை இல்லை. ஆனால் சமபந்தப்பட்ட குற்றவாளி சமுதாயத்துக்கு ஆபத்தானவர் என கருதப்பட்டால் அவருக்கான சிறைக்காவல் தண்டனையை காலவரையறையின்றி நீடிக்க முடியும். 14 வருடங்களின் பின்னர் முன்கூட்டிய விடுதலைக்காக மான்ஷோஸ் விண்ணப்பிக்க முடியும்.









No comments