Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வின்ஸ்டன் சேர்ச்சிலின் படம் இல்லாதமை குறித்து கூகுள் ஆராய்கிறது


பிரித்தானிய முன்னாள் பிரதமர்களின் புகைப்படப் பட்டியலில் வின்ஸ்டன் சேர்ச்சிலின் படம் காணாமல் போனமை குறித்து தான் ஆராய்வதாக கூகுள் நிறுவனம்  இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

கூகுள் தேடல் இயந்திரத்தின் சில தேடல் பெறுபேற்றின்போது கிடைநிலை வரிசையில் படங்களின் பட்டியலிலும் காட்டப்படுவது வழக்கம்.

இந்நிலையில், former UK prime ministers (பிரித்தானிய முன்னாள் பிரதமர்கள்) என்ற தேடலின்போது. காட்டப்பட்பட்ட பட்டியலில் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலின் பெயர் விபரம் இருந்தது. ஆனால், அவரின் புகைப்படம் இருக்கவில்லை.

வின்ஸ்டன் சேர்ச்சில் தொடர்பான இனவாத குற்றச்சாட்டுகள் மீண்டும் மேலெழுந்துள்ள நிலையில் அவரின் புகைப்படம் மேற்படி பட்டியலில் இடம்பெறாமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்புகைப்படம் காணாமல் போனமை, வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல எனவும், அது தானியங்கி இற்றைப்படுத்தல் (automatic update) செயற்பாட்டின்  விளைவு எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இது குறித்த கரிசணைகளுக்காக தான் மன்னிப்பு கோருவதாகவும், அவரின் புகைப்படத்தை இயன்றவரை விரைவில் இணைக்கவுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

வின்ஸ்டன் சேர்ச்சில் தனது பதவிக்காலத்தில் வெள்ளையர் அல்லாதோர் தொடர்பில் இனவாதமாக செயற்பட்டார் என விமர்சிக்கப்படுகிறார் 1943 ஆம் ஆண்டு இந்தியாவில் பஞ்சம் காரணமாக மில்லியன் கணக்கானோர் உயிரிழப்பதற்கு வழிவகுத்தது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

பிரிட்டனில் நடைபெற்ற கறுப்பினத்தவர்களின் உயிர் முக்கியம் என்ற தொனிப்பொருளிலான போராட்டத்தின்போது வின்ஸ்டன் சேர்ச்சிலின் சிலை சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது




No comments