திரையுலகில் கண்ணழகி என வர்ணிக்கப்படும் மீனாவின் ஒளிப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முத்து உள்ளிட்ட பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தார்.
பல தமிழ் திரைப்படங்களை நடித்துள்ள இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். தற்போது 40 வயதை எட்டியுள்ள அவர் தனது ஒளிப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த ஒளிப்படம் இரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.
No comments