Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மீண்டுமொரு கறுப்பின இளைஞன் படுகொலை - அமெரிக்காவில் தொடரும் ஆர்ப்பாட்டம்.


அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, அட்லாண்டா பொலிஸ் திணைக்களத்தின் தலைமை அதிகாரி எரிக்கா ஷீல்ட்ஸ் இராஜினாமா செய்துள்ளார்.

27 வயதான றேஷார்ட் ப்ரூக்ஸ் எனும் இளைஞரே கடந்த வெள்ளிக்கிழமைமை சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார்.

வெண்டீஸ் எனும் உணவகத்தின் ட்ரை த்ரூ பகுதியில் கார் ஒன்றில் அவர் உறங்கிக்கொண்டிருந்தார் எனவும் ஏனைய வாடிக்கையாளர்களுக்கு இடையயூறாக இருப்பதாகவும் உணவக ஊழியர்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தனர்.

அவரை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் டாசர் எனும் இலத்திரனியல் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ஓடியபோது, அவரை பொலிஸார் துரத்திச்சென்றனர். அதன்போது, பொலிஸ் அதிகாரிஒருவரை நோக்கி இலத்திரனியல் ஆயுதத்தை ப்ரூக்;ஸ் நீட்டியபோது அவர் மீது பொலிஸ் அதிகாரி துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்.

காயமடைந்த றேஷார்ட் ப்ரூக்ஸ் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் சிகிச்சையின் பின் உயிரிழந்தார். இம்மரணத்தையடுத்து அட்லாண்டா நகரில் பாரிய ஆர்பபாட்டங்கள் நடைபெற்றன.

அதையடுத்து அட்லாண்டா பொலிஸ் திணைக்களத்தின் தலைமை அதிகாரி எரிக்கா ஷீல்ட்ஸ் இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமாவின் பின்னரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. குறித்த வெண்டீஸ் உணவகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீககிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments